December 14, 2025
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு லோக்மானிய தெருவில் உள்ள கோவை கே ஆர் எஸ் பேக்கரியில் ஆண்டு தோறும் நடைபெறும் கேக் விற்பனை கண்காட்சி இந்த ஆண்டும் வழக்கம் போல் டிசம்பர் 14-ந் தேதி தொடங்கியது.
இதுகுறித்து கோவை கே ஆர் எஸ் நரேஷ் மற்றும் சுபா ஆகியோர் கூறியதாவது:-
இந்த ஆண்டு 2026 புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கேக்கண்காட்சி விற்பனைஇன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சி விற்பனையில் 50 வகையான சுவைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களில் கேக் வகைகள்உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சிறு தானியத்தால் ஆன”மில்லட் கேக் “பல்வேறு சுவைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு டிசைன்களில் கேக் வகைகள்விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு செய்யப்படும் கேக் வகைகள் அனைத்தும் உடல் நலத்திற்கு உகந்த மூல பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.மேலும் இந்த ஆண்டு குழந்தைகளுக்கு கேக் தயாரிப்பு பற்றிய பயிற்சி பட்டரை நடத்தப்பட்டது. அதில்25 குழந்தைகள் பங்கேற்று கேக் தயாரிப்பை பற்றி அறிந்து கொண்டனர்.
மேற்கண்ட அவர்கள் கூறினார்கள்.