May 16, 2021
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவை கேஜி குழுமத்தின் சார்பில் 1 கோடி ரூபாய் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலினை சந்தித்த கே.ஜி.குழுமங்களின் மேலாண்மை இயக்குநர் அசோக் பக்தவத்சலம் கேஜி.இன்பர்மேஷன்ஸ் பிரைவேட் நிறுவத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும்,KGISL அறக்கட்டளை சார்பில் ரூபாய் 50 லட்சத்துக்கான காசோலையையும் என மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலைகளை கொரோனா நிவாரணப்பணிகளுக்காக
முதலமைச்சரின் பொது
நிவாரண நிதிக்கு வழங்கினார்.