• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலம் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு

July 12, 2019 தண்டோரா குழு

வறட்சி, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் 3 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டது.

கடும் வறட்சியின் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி சூழல் சுற்றுலாப் பகுதியான கோவை குற்றாலம் மூடப்பட்டது. மேலும், பருவமழை பொய்த்துப் போனதால், நீடித்த வறட்சி காரணமாக குற்றாலத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. இந்த சூழலில் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், கோவை குற்றாலம் உள்பட பல்வேறு நீர்நிலைகளைத் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் வரத் தொடங்கின. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த சூழலைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் பகுதி சீரமைப்பு மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழையினால் கோவை குற்றாலம் ஓரளவிற்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளதோடு, சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், 108 நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது கோவை மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க