June 25, 2018
தண்டோரா குழு
கோவை குறிச்சி குளத்திற்கு நீர் வரும் வழிப்பாதைகளைக் பாரமாரித்து,நீர் வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நொய்யல் ஆற்றில் நீரானது வந்து கொண்டிருக்கிறது.இச்சூழலில் அதன் நீர் வழிப்பாதைகள் முறையாக தூர்வாரப்படமாலும்,பாரமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளாததாலும் நீர் வழிப்பாதையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருப்பதால் குறிச்சி குளத்திற்க்கு நீர் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறது.எனவே விவசாயத்திற்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் குறிச்சி குளத்திற்க்கு நீர் வருவதற்க்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.