• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தை

December 29, 2021 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் அருகே இரவு நேரங்களில் உலாவரும் சிறுத்தைகள் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பிள்ளையார்புரம், கோவைபுதூர், குனியமுத்தூர், பி.கே புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை அடித்து கொன்றது. காலையில் இதை கண்ட கல்லூரி ஊழியர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும் அந்த பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தை தற்போது கண்காணித்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் சிறுத்தை வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் சிறுத்தையால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க