February 5, 2018
தண்டோரா குழு
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் குண்டு வெடிப்பில் மரணமடைந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி பாரத் சேனாவினர் நினைவுத்தூனோடு வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று(பிப் 5) மனு அளித்தனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 58க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு ஆர் எஸ் புரம் பகுதியில் வருடந்தோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இறந்தவர்களின் நினைவாக அப்பகுதியில் நினைவுத்தூண் அமைக்கக்கோரி பல வருடங்களாக மனு கொடுத்தும் இதுவரை உரிய பதில் அளிக்காமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில்,பாரத் சேனா அமைப்பினர் நினைவுத்தூணை தூக்கியவாறு,இந்த ஆண்டு இறுதிக்குள் நினைவுத்தூண் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.