February 13, 2023
தண்டோரா குழு
கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைத்திடக்கோரி மாதிரி தூணுடன் வந்து மனு அளித்த இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்.
இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், 1998 ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 58 பேருக்கு நினைவு தூண் அமைத்திட கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.மனு அளிக்க வந்த அந்த இயக்கத்தினர் மாதிரி தூண் மற்றும் அவர்களது கோரிக்கை பதாகைகளை எடுத்து வந்து மனு அளித்தனர்.
மேலும் தற்போதைய தமிழக அரசு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.