• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் முன்னேற்றம் குறித்த தேசிய கருத்தரங்கு

February 7, 2020 தண்டோரா குழு

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் கல்வி மற்றும் உடல்நலம் பேணுதல் வழியாக பெண்கள் முன்னேற்றம் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

பெண் சிதைவுக்கு எதிரான சர்வதேச சகிப்புத்தன்மை நாளாக பிப்ரவரி ஆறாம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனைத்தொடர்ந்து கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் உடற்கல்வி துறையும் பெண் கல்வி மையமும் இணைந்து தேசிய பெண்கள் ஆணையம் குழு தில்லியில் நிதி உதவியுடன் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிருந்து 40 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வசந்தி கலந்துகொண்டார். மேலும் இதில் கல்லூரி முனைவர் யசோதா தேவி கல்லூரி முதல்வர் நிர்மலா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க