• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காவல்துறை ஆணையருக்கு கண்டனம்

January 25, 2017 தண்டோரா குழு

‘ எந்த ஒரு அடிப்படை ஆதரமும் இல்லாமல் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா (CFI)அமைப்பு மீது குற்றம்சாட்டிய கோவை காவல்துறை ஆணையருக்கு கண்டனம் ’ என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர் அமைப்பும் பங்கு கொண்டது. ஆறு நாட்கள் அறவழியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் ஏழாவது நாள் அந்தப் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முற்பட்ட போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இது குறித்து கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் கூறுகையில்

“ போராட்டத்தின் போது தேச விரோத கோஷங்கள் எழுப்பபட்டன. தேச விரோத செயல்களுக்கு சில அமைப்புகள் தான் காரணம் ” எனக் கூறினார். அதில் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா (CFI) அமைப்பும் அடங்கும்.

எந்த ஒரு அடிப்படை ஆதரமும் இல்லாமல் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா (CFI) அமைப்பு மீது கோவை காவல்துறை ஆணையர் குற்றம்சாட்டுகிறார் என அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

“இது வரை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா (CFI) அமைப்பு எந்த ஒரு தேச விரோத செயல்களிலும் ஈடுபட்டது கிடையாது. காவல்நிலையங்களில் எங்கள் அமைப்பின் மீது எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை. அப்படியிருக்கும் போது ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான பிரச்சனையை திசை திருப்ப, பொய் பிரச்சாரம் செய்யும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். அவரது இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்.” என கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ரஹுமான் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியுள்ளார்.

மேலும் படிக்க