February 22, 2018
தண்டோரா குழு
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள பழைய பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு தீயில் எரிந்தது.
கோவை காளபட்டி பகுதியில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சந்திரா பஞ்சு குடோனில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கபட்டிருந்த பஞ்சுகளில் தீ பரவியதை அடுத்து அப்பகுதி முற்றிலும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டது.இதனையடுத்து பீளமேடு,கணபதி, தெற்கு தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து உரிமையாளர் ஸ்ரீராம் கூறுகையில்,1500 டன் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ளார்.