• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது – நள்ளிரவில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

August 2, 2023 தண்டோரா குழு

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

அதன்பின், இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் 11 பேர் வரை கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த மேலும் ஒருவரான முகமது இத்ரிஸ் என்பவரை நேற்று இரவு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதுசெய்தனர்.

தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து செல்லப்பட்டார். கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க