• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரம் இரண்டாவது மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவு – விரைவில் திறப்பு

January 4, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் இரண்டாவது மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தது விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை காந்திபுரம் இரண்டாவது 100 அடி ரோடு மேம்பாலம் கட்டுமானப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் மேம் பாலம் திறக்கப்படும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே போகிறது. கோவை காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பார்க் கேட் சிக்னல் முதல் சக்தி சாலை ஆம்னி பேருந்து நிலையம் வரை சுமார் ரூபாய் 120 கோடி மதிப்பில் முதல்கட்ட மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.இந்த மேம்பாலம் இரண்டு அடுக்கு மேம்பாலம் ஆக திட்டமிட்டு ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் துவங்கிய மேம்பாலப் பணிகள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.ஆனால் இந்த மேம்பாலம் வழியாக கிராஸ்கட் ரோடு மற்றும் 100 அடி ரோடு பகுதிகளுக்கு செல்ல ரவுண்டானா அமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்க் கேட் முதல் ஆம்னி பேருந்து நிலையம் வரை எங்கும் நிறுத்தம் இல்லாமல் செல்லக்கூடிய வகையில் தான் இந்த மேம்பாலம் அமைந்தது ஆனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனிடையே 100 அடி ரோடு மற்றும் சின்னசாமி ரோட்டில் ரூபாய் 25 கோடியில் காந்திபுரத்தில் மேம்பாலத்தை கடக்கும் வகையில் இரண்டாவது மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.இந்த பாலம் ஜி பி தியேட்டர் சந்திப்பில் காஞ்சிபுரம் மேம்பாலத்தை கடக்கும் பகுதியில் சுமார் 60 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது இதனிடையே மேம்பாலத்தை முடிக்கும் பணி தற்போது 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் பாலத்தில் 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க