• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காந்திபுரம் இரண்டாம் அடுக்கு மேம்பாலம் காணொளி காட்சி மூலம் திறப்பு

January 29, 2020

கோவை காந்திபுரம் பகுதியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் கோவையின் பிரதானப் பகுதியான காந்திபுரம் பகுதியில் இரண்டடுக்கு மேம்பாலப் பணிகள் 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு காந்திபுரம் பார்க் கேட் முதல் டெக்ஸ்டூல் வரையிலான நான்கு வழிச்சாலை மேம்பாலம் 120 கோடி ரூபாய் மதிப்பில் 2017 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதனை 2017 நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி நேரில் வந்து திறந்து வைத்தார். இதில் மைசூர், தாளவாடி, பண்ணாரி, சத்தியமங்கலம், கோவில்பாளையம், சரவணம்பட்டி, கணபதி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மேம்பாலத்தை பயன்படுத்தியதால் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்தது.

முதல் மேம்பாலத்தில் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையல் பகுதியில் ரவுண்டான அமைத்திருக்க வேண்டும் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அதன் பின்னர் 2017 மார்ச் மாதம் துவங்கப்பட்ட 100 அடி சாலை முதல் ராமகிருஷ்ணா சாலை வரை 1.75 கிலோ மீட்டர் தொலைவில் 75 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கப்படு தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்த மேம்பாலம் இரண்டாம் அடுக்காக கட்டப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவையில் அமைச்சர் வேலுமணி கொடி அசைத்து வாகன போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க