January 25, 2020
கோவை கவுண்டம்பாளையம் அருகே தமிழ்நாடு அரசு விரவு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கவுண்டம்பாளையம் அருகே தமிழ்நாடு அரசு விரவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு தொலை தூரம் செல்லும் வெளியூர் அரசு பேருந்துகள்களை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று பணிமனையில் இருந்து வெளியே செல்ல கிளம்பிய ஒரு பேருந்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதைப் பார்த்ததும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டார். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. உடனடியாக கோவை வடக்கு தீயனைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த தீயனைபுதுரையினர் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.அதற்குள்ளாக பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசார்ணையில் தெரியவந்துள்ளது. பேருந்து தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.