March 21, 2018
தண்டோரா குழு
கோவை கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் கடை அகற்ற மறுக்கும் காவல்துறை துறையை கண்டித்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிழக்கு ஈ1 காவல் நிலையம் எதிரே டாஸ்மாக் கடை செயல்படுகிறது.இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அச்சப்படும் நிலை உள்ளதால் உடனே டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சமூக ஆர்வலர் மணி என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
இந்நிலையில் தனது மீது பொய் புகார் பதிவு செய்து குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் முயற்சிபாதாக கூறி இன்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் பதாகைகள் கழுத்தில் தொங்க விட்டப்படி கோஷம் போட்ட படி தர்ணா போராட்டத்தில் அமர்ந்தார்.இதனையடுத்து காவலர்கள் மணியை எழுப்ப வலியுறித்திய போது மறைத்து வைத்திருந்த சானி பவுடரை எடுத்து குடித்து விட்டார்.உடனே அருகிலிருந்த காவலர்கள் சானிபவுடரை தட்டிவிட்டு அவரை கைது செய்து,சிகிச்சைக்காக அரசு மருத்துவ மணைக்கு அழைத்து சென்றனர்.