• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கரும்புகடையில் சுகாதார அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகர் கைது

April 5, 2020 தண்டோரா குழு

காய்ச்சல், சளி குறித்த கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள், கொரோனா பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவை மாநகராட்சி முழுவதும் அனைத்து வீட்டுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை, அங்கன்வாடி மையம் ஊழியர்கள் உள்ளிட்டோர் சென்று காய்ச்சல் மற்றும் சளி உள்ளதா? என்ற பரிசோதனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோவை கரும்புக்கடை அருகே 3 பெண் சுகாதார துறை மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பிற்கு சென்றனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் இஸ்மாயில் என்பவர் பெண் ஊழியர்களை அவதூறாக பேசி, அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டி உள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சங்கீதா என்பவர் போத்தனூர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் இஸ்மாயில் என்பவரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் துன்புறுத்தல் தடுப்பு சட்டம், நோயை பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க