April 20, 2020
தண்டோரா குழு
மத்திய அரசின் உத்தரவு படி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்க வசூல் கட்டணம் இன்று முதல் துவங்கியது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு,20 ந்தேதி முதல் சுங்க கட்டணம் துவங்கும் என அறிவித்திருந்தது.
ஊரடங்கு 3 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், இன்று முதல் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும், பல்வேறு தொழிற்சாலைகள் சில கட்டுப்பாடுகளுடனும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால்,கணிசமான போக்குவரத்து. ஏற்பட வாய்ப்புள்ளதால் சுங்க கட்டண வசூல் இன்று முதல் துவங்கியது.
அதன் படி இன்று கோவை கருமத்தம்பட்டி நெடுஞ்சாலையைப் பயன்படுத்துபவர்களிடம் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மத்திய அரசின் இந்த உத்தரவு பல்வேறு தலைவர்களிடமிருந்து கண்டனங்களைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.