• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கணியூர் சுங்க சாவடி அருகே கார் விபத்து இருவர் படுகாயம்

December 30, 2019

கோவை நீலாம்பூர் முதல் சேலம் வரை NH 47 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை கேரளா செல்லும் முக்கிய சாலை என்பதால் பேருந்து, லாரி, வேன், கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்நிலையில் கோவையில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி வெள்ளை நிற ஹுண்டாய் கிராண்ட் ஐ10 கார் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை தொடர்ந்து நீலநிற சூசுகி உயர்ரக காரும் பின் தொடர்ந்து வந்துள்ளது. ஹுண்டாய் காரில் பயணித்த சிறுவன் தனக்கு சிறுநீரகம் வருவதாக கூறியதால், கணியூர் சுங்க சாவடிக்கு முன்னர் இடது பக்கம் தனது காரை திரும்பிய போது, பின்னாடி வந்த மாருதி சூசுகி கார், முன்னாடி சென்ற காரின் இடது பக்கம் நடுவே கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் ஹுண்டாய் கார் சாலையின் இடதுபுறமாகவும், மாருதி சுசுகி சாலையின் வலது புறமாக சென்று ஓரத்தில் நின்றது. இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஹுண்டாய் காரின் இடது நடுபக்கம் பயங்கர சேதம் அடைந்து, காரை ஓட்டி வந்த உரிமையாளருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டியது. மாருதி சூசுகி காரின் முன் பகுதி அனைத்தும் சேதமடைந்தது. இதில் பயணித்த முன்னாடி இருந்தவர்களும் ஏர்பேக் திறந்ததால் சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டது. பின்னால் பயணித்த 2 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதால் அச்சாலையில் பயணித்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்த வந்த போலீசார் வாகன போக்குவரத்தை சரிசெய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க