• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கங்கா கங்கா மருத்துவமனையின் நிறுவனர் காலமானார்

August 18, 2023 தண்டோரா குழு

டாக்டர்.ஜே.ஜி.கோவை கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் சண்முகநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) காலமானார்.அவருக்கு வயது 93.

அவர் 1978 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் தனது மனைவியும் இணை நிறுவனருமான கனகவல்லி சண்முகநாதனுடன் இணைந்து கங்கா மருத்துவமனையைத் தொடங்கினார். அதில் 17 படுக்கைகள் மற்றும் 2 அறுவை சிகிச்சை அறைகள் இருந்தன.அவரது திறமையான தலைமையின் கீழ், கங்கா மருத்துவமனை 4 மடங்கு விரிவடைந்தது.

மேலும் 2020 ஆம் ஆண்டில் 38 ஆபரேஷன் தியேட்டர்களுடன் 650 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறியது. அவர் 2010 முதல் நகரில் பல மருத்துவ-கல்வி நிறுவனங்களையும் தொடங்கினார்.அவரது வழிகாட்டுதலுடன், மருத்துவமனை நாட்டின் மிக முக்கியமான மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக நற்பெயரைப் பெற்றது.

மேலும், சண்முகநாதன் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார், அவர் தனது 78வது வயதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்து 2013 இல் ஆய்வறிக்கையை வெற்றிகரமாக முடித்தார். அவரது மறைவு கோவைக்கு பெரும் இழப்பாகும்.

மேலும் படிக்க