• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒப்பணக்கார வீதியில் புதிய மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகம் துவக்கம்

March 12, 2023 தண்டோரா குழு

கோவை ஒப்பணக்கார வீதியில் புதிதாக துவங்கப்பட்ட மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனை நிறுவனத்தை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

தங்கம் மற்றும் வைர நகை விற்பனையில் முன்னனி நிறுவனமான மலபார் கோல்டு தனது 21 வது கிளையை கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் துவக்கியது.மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 20 கிளைகளை கொண்டுள்ளது.இந்நிலையில் புதிதாக கோவை ஒப்பணக்கார வீதியில் துவங்கப்பட்ட 21 வது கிளை துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக,தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

விழாவில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர்,வணிக தலைவர் சபீர் அலி,மேற்கு மண்டல தலைவர் நௌசாத், வடக்கு மண்டல தலைவர் .அமீர் பாபு கிழக்கு மண்டல தலைவர் .சுதிர் முகமது,ஒப்பணக்கார வீதி கிளை தலைவர் மனு மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
புதிய ஷோரூமில் மூன்று தளங்களில் அதிகமான இடவசதி, கலெக்சன்கள், டிசைன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.வைரநகைகளான ‘மைன்’, ‘எரா”பிரீசியா’நகைகள், கைவினைகலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ ‘ஸ்டார்லெட் உள்ளிட்ட கலெக்சன்கள் இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க