December 11, 2021
தண்டோரா குழு
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின்பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரேக்ளா பந்தயம். நடைபெற்றது.இந்த போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடக்கி வைக்கிறார்.
கோவை ஒத்தகால்மண்டபம் வேலந்தாவளம் ரோட்டில்உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்தநாளை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் காலை 7 மணி அளவில் துவங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ரேக்ளா பந்தயத்தை தொடக்கி தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று மாலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசுகளை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா கிருஷ்ணன், ராமச்சந்திரன், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..