• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒண்டிப்புதூரில் 5வயது மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்த தாய்

October 18, 2019 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூரை வேதவள்ளி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி. இவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக அங்கு வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர் கண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த போது இறந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

நேற்று இரவு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருடன் இவர்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அக்கம் பக்கத்தினருக்கு விவரம் ஏதும் தெரியவில்லை. வேதவள்ளியின் உடலை கைப்பற்றிய சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

மேலும் படிக்க