September 9, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இருந்த மரம் விழுந்ததில் பொதுமக்கள் 5 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. மரமானது அருகில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் சாய்ந்ததால் பத்திரபதிவு அலுவலக வளாகத்தில் போடப்பட்டிருந்த கூரை மேல் விழுந்தது. இதில் கூரைக்குள் இருந்த பொதுமக்கள் 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன.