April 7, 2020
தண்டோரா குழு
கோவை உழவர் சந்தைகளில் கொரோனா தொற்று தடுப்பு கிருமி நீக்கி சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலினால் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நோயின் தீவிரத்தை குறைக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் பொது மக்கள் கூடும் இடங்களான கோவை சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தையில் கொரோனா தொற்று தடுப்பு கிருமி நீக்கி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை உள்ளாட்சி துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் பின்னர்,அமைச்சர்,எம்.எல்.ஏ – க்கள்,அரசு அதிகாரிகள் இச்சுரங்கத்தினை துவக்கி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து உக்கடம் காய்கறி மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.