• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டார்

December 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா இன்று வெளியிட்டார்.

கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 2018-ம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அரசியல் அடிப்படையிலும், கடந்த மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலன் சுன்கரா வெளியிட்டார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச்சாவடிகள், 287 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 69 ஆயிரத்து 397, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 736 மற்றும் மூன்றாம் பாலினம் 278 மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலன் சுன்கரா தெரிவித்தார்.

மேலும், வாக்காளர் பட்டியல் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க