• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

December 11, 2019

கோவை உக்கடத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் முகமது வாசிக். இவர் தனது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே, பெற்றோர் உடனடியாக ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து இந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல் துறையினர் முகமது வாசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க