February 28, 2020
கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்த பிளம்பர் தொழில் செய்து வரும் ஜோதி(33) என்பவர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சுகாதார பணியில் ஈடுபட்டிருந்த 32 வயதான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக புகார்.
இதையடுத்து,பெண்ணை அவமானம் செய்தல், அறிந்தே காயம் ஏற்படுத்துதல், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜோதியை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலியல் துன்புறுத்தலால், பெண்ணிற்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை தடுத்து, அப்பெண் ஜோதியிடமிருந்து தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.