July 26, 2018
தண்டோரா குழு
பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதி யோகி சிலைக்கு முன்னர் அமர்ந்து தியானம் செய்தார்.
கோவையில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு இங்கு தொடர்ந்து யோக பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். இங்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வழக்கமாக வந்து செல்கின்றனர்.
தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து தாம் தூம் படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அதன் பின் இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி முத்திரையினை பதித்துள்ளார். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் நடிகை கங்கனா ரணாவத் தற்போது ஆன்மிக பயணத்தில் இறங்கியுள்ளார்.
இதற்காக கங்கனா ராணாவத் மும்பையில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வழக்கமாக மாடர்ன் உடலில் அல்லாமல் புடவை அணிந்து சென்றார். ஈஷா மையத்தின் ஆதிகேஷ் ஆஸ்ரமத்திற்கு சென்று அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர், ஆதி யோகி சிலைக்கு முன்னர் அமர்ந்து தியானம் செய்துள்ளார்.