• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கிய கல்லூரி மாணவர்கள்

June 30, 2021 தண்டோரா குழு

கோவையில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் இணைந்து நடத்தும் GIRL UP FEMBOTS சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மதிய உணவை வழங்கப்பட்டது.

யுனைடெட் நேஷன் பஙுண்டேஷனின் கிளை அமைப்பாக கோவையை தலைமையிடமாக கொண்டு Girl up fembots எனும் தன்னார்வ அமைப்பு பல்வேறு சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வருகிறது.முழுக்க சுமார் 200 கல்லூரி மாணவ,மாணவியர்கள் ஒருங்கிணைந்து செயல்படும் Girl up fembots சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்,மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

அமைப்பின் துணை தலைவர் தீக்‌ஷா,செயலாளர் அதுரக்‌ஷனா, நிகழ்ச்சி இயக்குனர் ஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,உறுப்பினர்கள் அக்‌ஷயா, ஹரிஹரன்,கேசவ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு சமூக பணிகளை நடத்தி வருவதாகவும்,குறிப்பாக ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராம பெண்களுக்கு நாப்கின் வழங்குவது, கல்வி குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க