• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

May 15, 2021 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு, புதிய கொரோனா சிகிச்சை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், அதன் படி இன்று கோவை வந்த அவர் முன்னதாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கான நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கூடுதலாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை வார்டுகளை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மொத்தம் 830 படுக்கையிடன் இயங்குகிறது. இதுவரை இங்கு 17 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று நலம் பெற்றுள்ளனர்.மேலும் ஆக்ஸிஜன் பயன்பாடு சிக்கனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதனை சிறப்பாக கடைபிடிப்பதில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்னிலையில் உள்ளது என தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையாக ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் முறைகளையும் செயல்படுத்தி வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை டீன் பிற தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்து செயல்முறை விளக்க அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். மேலும் மருத்துவமனை சார்பாக கூடுதல் ஆக்ஸிஜன் யூனிட் படுக்கை வசிதிகளை கேட்டுள்ளனர். அதற்கான குறிப்புகளை பெற்று அரசுக்கு அனுப்புகின்றனர். மேலும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து வரதராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு, கையிறுப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மழையில் நீண்ட வரிசையில் தடுப்பூசி செலுத்த மக்கள் நின்று கொண்டிருந்த கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள மழையில் நிற்காதவாறு பள்ளி கட்டிடத்தில் நிற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கொடிசியா உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க