May 26, 2021
தண்டோரா குழு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துமனைக்கு வரும் நோயாளிகள் பயன்பாட்டுக்கென ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.
கோவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு சுமார் 3 இலட்சம் மதிப்புள்ள 4 ஆக்சிஜன் செறிவூட்டுகள் வழங்கப்பட்டது. அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி வழிகாட்டுதலின் பேரில்,தேசிய அமைப்புச் செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில், நடைபெற்ற இதில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் எஸ். கே. எம் சுரேஷ்குமார், மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில் குமார் ஆகியோர் இஎஸ்ஐ மருத்துவமனை
டீன் மருத்துவர் ரவீந்திரன் மற்றும் சூப்பிரண்டென்டென்ட் டாக்டர் ரவிக்குமார் ஆகியோரிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து நேரு நகர் அரிமா சங்கம் சார்பாக வழக்கமாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.அதே போல மருத்துவமனை வளாகம்,பேருந்து நிலையம்,போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை தொழிலாளர் குடும்பங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் பணியை நேரு நகர் அரிமா சங்கம் செய்து வருவது குறிப்பிடதக்கது.