• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு

November 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைச்சாலையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரன் மூலம் முதலமைச்சருக்கு மனு அளித்தனர்.

தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சிறைவாசிகள் சிறைப்பட்டு உள்ளனர்.இவர்களை கருணை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய ஜமாத்துகள், இயக்கங்கள் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத்தார்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் சமீரன் இடம் மனு அளித்தனர்.

இதில் ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாத்தே இஸ்லாம், ஜாக், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் இந்தியா, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா, இன்னும் ஏராளமான ஜமாத், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்கள்.

மேலும் படிக்க