• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இருகூரில் குடோனில் தீ விபத்து – 1 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதம்

May 25, 2019 தண்டோரா குழு

கோவை இருகூரில் பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமடைந்தது.

கோவையை அடுத்த இருகூரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோனில் ராமச்சந்திரன் என்பவர் கடந்த 7 வருடங்களாக பஞ்சு மொத்த விற்பனை செய்யும் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார்.இந்த குடோனில் வட இந்தியவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்தால் குடோனில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின.இந்த தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு,சூலூர் போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து பகுதிகளிலும் பரவியது.

சிங்காநல்லூர் காவல்துறையினரும் போக்குவரத்து காவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர். சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க