• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால முதலுவதவி சிகிச்சை மையம் திறப்பு

January 30, 2019 தண்டோரா குழு

கோவை இரயில் நிலையத்தில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில், 24 மணி நேரம் இயங்கும் இலவச முதலுதவி சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழா கோவை இரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

முதலுதவி சிகிச்சை மையத்தை ராயல் கேர் மருத்துமனையின் தலைவர் மாதேஸ்வரன் துவக்கி வைத்து,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த மையம் இரயில் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு உடனடி சிகிச்சை அளிக்க, 24 மணி நேரமும் இயங்கும். முதலுதவியுடன், மேல் சிகிச்சை தேவைப்படும் பயணிகள், வெளியில் உள்ள மருத்துவமனைக்கு தாமதமின்றி அனுப்பிவைப்பதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதயம் மற்றும் இன்ன பிற நோயால் பாதிக்கப்படுபவர்களை கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு நோயாளிகள் விரும்பும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இரயில் நிலைய அதிகாரிகள் செந்தில் குமார்,சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க