June 17, 2022
தண்டோரா குழு
கோவை இன்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டடரி 2022-23 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ரேஸ்கோர்ஸில் உள்ள சீமா ஹாலில் நடைபெற்றது.
புதிய தலைவராக கனகராஜ், செயலாளராக சபியுல்லா,உதவி தலைவராக உமா பாபு, பொருளாளராக நந்தகுமார் இணைச் செயலாளராக சதீஷ் குமார், டி.ஆர்.எப் சேர்மன் பிரபல வழக்கறிஞர் பிரபு சங்கர், ஒருங்கிணைப்பாளர் பிரேம் செந்தில்,
கிளப் அட்மின் மகேஸ்வரன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதை தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளாக பிரபு ராம், அருண்பிரசாத்,மோகன் தாஸ் உன்னி,ஜெகதீசன்,அம்பலவானன், மோகன், பிரசாத், ராஜசேகர் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜி.எஸ்.டி.ஆடிட் டோலோ திருப்பதி, சிறப்பு விருந்தினராக பிரபல மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.