• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை இசைக்கச்சேரியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த 96 பட இசையமைப்பாளர்

March 7, 2020

கோவை கே.சி.டி கல்லூரியில் 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் அவரது குழுவினர் நடத்திய இசைக்கச்சேரியை மாணவ-மாணவிகள் மெய்சிலிர்க்க ரசித்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கே.சி.டி கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கலாச்சார, தொழில்நுட்ப, விளையாட்டு விழாவாகத் திகழும் ‘யுகம் – 2020’ கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி தொடங்கியது.இதில், டெக் கான்க்ளேவ், இன்ஸ்பயர் இந்தியா, யுத் கான்க்ளேவ், சோசியல் கான்ஸ்ட்டன்ட்ஸ் மற்றும் ப்புரேஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, மற்றும் அவரது ‘தைக்குடம் பிரிட்ஜ்’ குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெற்றது.இதில், இளையராஜா பாடல்கள், மலையாளம் மற்றும் தமிழ் பாடல்களை பாடினர். மேலும், 96 படத்தில் அனைவரது மனதையும் கவர்ந்த ‘லைப் ஆப் ராம்’ என்ற பாடலை கோவிந்த் வசந்தா பாடுகையில், மாணவ- மாணவிகள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கூக்குரல் எழுப்பினர்.

மேலும் படிக்க