• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் சிகிச்சை

June 2, 2020 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 28 நாட்களுக்கு பிறகு நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்த 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மேலும் படிக்க