• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் 62 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் காலியாக உள்ளன – மருத்துவமனை முதல்வர்

May 29, 2021 தண்டோரா குழு

கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் 62 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் காலியாக உள்ளதாக மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தினசரி வைரஸ் தொற்று பாதிப்பில் மூன்றாவது நாளாக தொடர்ந்து கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 4734 ஆக இருந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 3937 ஆக குறைந்தது.தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நூற்பாலை, பள்ளிகள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரசு கலைக் கல்லூரியில் 200 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து ஆக்சிஜன் படுக்கைகளுக்கு நிலவிவந்த தட்டுப்பாடு குறைந்திருக்கிறது.குறிப்பாக இஎஸ்ஐ மருத்துவமனையில் 747 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உள்ள நிலையில் 679 படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும், 62 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 40 படுக்கைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் உள்ளது எனவும் மருத்துவமனையில் மொத்தமுள்ள 980 படுக்கைகள் 778 படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில் 102 படுக்கைகள் காலியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இஎஸ்ஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்காக ஆம்புலன்சில் நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் காத்திருக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க