February 21, 2018
தண்டோரா குழு
கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் ஆகிய பொருட்கள் புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கோடை காலத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் புதிதாக கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் மோர் மற்றும் தயிர் ஆகிய பொருட்கள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில்,
தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று அறிமுகப்படுத்திய மோர் மற்றும் தயிர் கோடை காலத்தில் மக்களுக்கு பயன் பெறும் வகையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யவுள்ளோம்.இது கோடை காலத்தில் மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.பால் விற்பனை அதிகரிக்க புதிய முகவர்களை நியமித்துள்ளதாகவும் கூறினர்.
மேலும், இது குறித்து மக்களிடம் கேட்ட போது ஆவின் நிறுவனம் வழங்கும் இந்த சலுகை மிகவும் பயன் உள்ளதாகவும் இந்த பொருட்களின் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினர்.