• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள “கோவை கே.ஆர்.எஸ்” – பேக்கரியில் கேக் திருவிழா !

December 17, 2023 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தா சாரட் வண்டியில் வருவது போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25″ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஒவ்வொருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கேக்குகளை வழங்கி மகிழ்வர்.

இந்நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக – கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள (“கோவை கே.ஆர்.எஸ்”) -பேக்கரியில் கேக் திருவிழா துவங்கி உள்ளது.இதில் கிறிஸ்துமஸ் தாத்தா கேக், கிறிஸ்துமஸ் மரம் கேக், பட்டர் பிளம் கேக், சாண்டா கிளாஸ், ஸ்னோ ஒயிட் போன்றவைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இது குறித்து கோவை கே.ஆர்.எஸ். பேக்ஸின் உரிமையாளர்கள் நரேஷ்,சுபா மற்றும் பேஸ்ட்ரி செஃப் எனப்படும் கேக் கலை நிபுணர் அம்சவேணி ஆகியோர் கூறியதாவது,

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்ராண்டை வரவேற்கும் விதமாக – 50″க்கும் மேற்பட்ட சுவைகளில் 100″ க்கும் மேற்பட்ட டிசைன்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்,குறிப்பாக அனைவரும் சுவைக்கும் வகையில் முட்டைகள் இன்றி கேக்குகள் தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வரிவதாக தெரிவித்தனர்.

குறிப்பாக தற்போது வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்த்து சிலரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டுசர்க்கரை, ராகி,சோளம் போன்ற சிறுதானிய வகை கேக்குளையும் தயாரித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க