• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.2 கோடி மதிப்பிளான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசம்

February 25, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மைதானத்தில் வைத்திருந்த சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) ரோலில் தீவிபத்து, சுமார் 2 கோடி மதிப்பிளான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆண்கள் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ஆக்கி மைதானம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்த மைதான பணிக்காக கொண்டுவரப்பட்ட சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) மைதானத்தின் ஒரு பகுதியில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிந்தடிக் டர்ப் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் திடிரென தீப்பிடித்து பரவியது. இதனால் அந்த சிந்தடிக் டர்ப் பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 2 கோடி மதிப்பிளான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.

மேலும் படிக்க