• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆனைமலைஸ் ஷோரூமில் கூல் நியூ டொயோட்டா புதிய ஹேட்ச் பேக் வாகன அறிமுக விழா

April 8, 2022 தண்டோரா குழு

டொயோட்டா, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய COOL NEW TOYOTA GLANSA புதிய ஹேட்ச் பேக் வாகன அறிமுக விழா கோவை ஆனைமலைஸ் ஷோரூம் வளாகத்தில் நடைபெற்றது.

டொயோட்டா வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மேம்படுத்தப்பட்ட அதி நவீன வசதிகளுடன் நான்கு மாடல்களில் டொயோட்டா க்ளான்சா தற்போது அறிமுகமாகி உள்ளது. ஹேட்ச் பேக் வாகனமான இதன் அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது.

க்ளான்சா குறித்து நிறுவனத்தின் விற்பனை துணை தலைவர் டக்காசி டக்காமியா கூறுகையில்,

உலகம் முழுவதும் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்ற டொயோட்டா நிறுவனம் தனது புதிய க்ளான்சாவை அறிமுகபடுத்தி உள்ளதாகவும்,புதிய கிளான்சா முந்தைய மாடலை விட அதிக மாற்றங்களை பெற்று இருப்பதோடு, ஏராளமான அம்சங்கள், மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் முன்பை விட அதிக மைலேஜ் வழங்கும் என்ஜின் திறனாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக, புதிய க்ளான்ஸா முன்பக்கம் புதிய முன்பக்க பம்பர், புதிய ஹெட் லைட், LED DRLS மற்றும் கிராபிக்ஸ் உள்ளது.

இந்த காரில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இந்த காரில் நான்கு ட்ரிம் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளது.இந்த கார் E, S, G, V ஆகிய மாடல்களில் கிடைக்கிறது.. டேஷ் போர்டு, புதிய டச் ஸ்க்ரீன்,புதிய இன்போடைன்மெண்ட் சிஸ்டம்,புதிய ஸ்டேரிங் வீல் போன்ற வசதிகள் உள்ளன.

மேலும் இந்த காரில் HUD டிஸ்பிலே, 360 டிகிரி கேமரா, 9 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், டொயோட்டா ஐ கனக்ட், 6 ஏர் பேக் வசதிகள், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டேரிங் வீல், டெலெஸ்கோபிக் அடஜஸ்ட் போன்ற,சொகுசு கார்களில் உள்ளது போன்றே அனைத்து வசதிகளையும் கொண்டு,கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன்,உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனைமலைஸ் டொயோட்டா, கோயம்புத்தூர் ஷோரூமில் COOL NEW TOYOTA GLANZA புதிய மாடல் ஹேட்ச்பேக் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விழாவில ஆனைமலைஸ் டொயோட்டாவின் தலைமை மேலாளர்கள் மற்றும் ARC குழும நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.COOL NEW TOYOTA GLANZA வாகனம் Manual மற்றும் Automatic டிராண்ஸ்மிஷனில் மொத்தம் 5 கலர்களில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க