• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆணைகட்டியில் யானை தாக்கி முதாட்டி உயிரிழப்பு – தொடரும் மனித – விலங்கு மோதல் தீர்வு என்ன?

May 8, 2019 எம். அருண் குமார்

கோவை அணைக்கட்டியில் யானை நடமாட்டம் இருந்ததை அறியாத, கண் பார்வை குறைபாடு உள்ள 80 வயது மிகுந்த மூதாட்டி தூக்கி வாரி வீசப்பட்டு உயிரிழந்தார்.

பார்பதற்கு அழகான மலைக்குன்றுகள், எங்கு பார்த்தாலும் மரங்கள் இவ்வாறு இயற்கை அழகை மிஞ்சியிருக்கும் சுற்றுலா தளங்களில் ஆணைக்கட்டியும் ஓன்று. சுற்றுலா தளத்திற்கு ஆணைக்கட்டி சிறந்த தளமாக இருந்தாலும், இங்கு வருபவர்களுக்கு வன விலங்குகளால் அச்சுறுத்தல் அதிகம் காணப்படுகிறது. காரணம் தற்போது வெயில் காலம் என்பதினால் மனிதர்களுக்கு மட்டுமல்ல வன விலங்குகளுக்கு தொந்தரவுதான். அதிலும் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். நீர் மற்றும் உணவை தேடி தடதடவென்று மக்கள் வசிக்கும் பகுதிக்கு யானைகள் வந்துவிடுகிறது. ஏன் யானைகள் காடுகள், மலைகளை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு வர வேண்டும்? என கேட்டால் அது முட்டாள் தனமே. காடுகள் அழிந்து வருவதும், மழைபெய்யும் தன்மை குறைந்து காணப்படுவதும் நமக்கு நன்றாக தெரிந்ததே. இந்த சுற்றுச்சூழல் மாற்றம் மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் பெருமளவில் பாதிக்கின்றது.

இதன் காரணமாகவே வனவிலங்குகள் ஊருக்குள் அதிகமாக வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் மட்டுமல்ல, அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களும் அச்சத்திலேயேதான் இருக்கிறார்கள். மேலும் பல உயிரிழப்புகளும் இங்கே அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில், கொண்டனுர் புதூர் மலைக்கிராமத்தை சேர்ந்த வனக்குழு தலைவர் வீரபாண்டியின் தாயார் கொல்லம்மால்(வயது 80) தந்தையார் நஞ்சப்பன். 80 வயது மிகுந்த கொல்லம்மாவுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இன்று காலைப்பொழுதில் கொல்லம்மாள் காட்டுப்பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு யானை நடமாட்டம் இருந்ததை அறியாத கொல்லம்மா சென்று விட்டார். சற்று தொலைவில் நடமாடிக்கொண்டிருந்த யானையின் அருகில் அவர் நெருங்கவே யானையால் தூக்கி வாரி வீசப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த கொல்லம்மா பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு இந்த சம்பவம் கேட்டு அறிந்த உறவினர்கள் உடலை எடுத்துச்சென்று தகனம் செய்தனர்.

இது குறித்து ஆணைக்கட்டியை சேர்ந்த சிவா மற்றும் அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில்,

இது போன்று பல உயரிழப்புகள் நேர்ந்துள்ளது. ஆனால் இதற்கு எந்த ஒரு பாதுகாப்பும் அரசால் நிச்சயிக்கபடவில்லை. இங்கு வாழும் மக்களும் எப்போதும் பயத்திலேயே வாழும் நிலை உருவாகியுள்ளது. இது போன்று சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும். வன விலங்குகளுக்கான உணவுகள் காடுகளிலேயே கிடைக்க வழிவகை அரசால் செய்யப்பட வேண்டும். இதனால் வன விலங்குகள் காட்டுப்பகுதியிலிருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவது தடுக்கப்படும். இதனால் மலைவாழ் மக்கள் பாதுகாப்புடன், மிருகங்களின் அச்சுறுத்தல் இன்றி வாழ வகை ஏற்படும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன விலங்குகளின் தாக்குதல் சம்பவங்கள் சாதாரணமாக மலைவாழ் மக்களுக்கு நிகழ்ந்து வருகிறது. ஆனால் இதுவரை இதற்கென தீர்வு இன்னும் முழுமையாக கொண்டுவரப்படவில்லை. ஆனால் அதற்கு ஏற்ப மரங்களும் காடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் மழை பொழிவு மிகவும் குறைந்துள்ளது. இது மனிதர்களுக்கு மட்டுமா? மிருகங்களுக்கும் பாதிப்பு பெருமளவில் ஏற்படுத்துகிறது. இதற்கான தீர்வுகள் அரசால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.

மேலும் படிக்க