• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் மீது வீண்பழி சுமத்தி விவசாயிகளை திசைதிருப்பும் முயற்சி

May 3, 2022 தண்டோரா குழு

கோவையில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி மற்றும் துணை தலைவர் பெரியசாமி முன்னிலையில் 10க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பறிபோகும் வண்ணம் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். குறிப்பாக மேற்கு புறவழிச்சாலை திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம், கெயில் கேஸ் பைப்லைன் திட்டம், சாலை விரிவாக்கங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு விவசாயிகள் தங்களது விளைநிலைங்களை பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசு திட்டங்களை செயல்படுத்த சாத்திய கூறு உள்ள வழிவகைகளை தீர்மானித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பி சுமூக உடன்படிக்கையின் மூலமாக திட்டங்களை நிறைவேற்ற ஆட்சியர் முயற்சித்து வருகிறார்.

விவசாயிகளின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்து வருகிறார். ஆனால் சிலர் வேண்டுமென்றே ஆட்சியர் சமீரன் மீது வீண்பழி சுமத்தி அவருக்கு எதிராக விவசாயிகளை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே விவசாய பெருமக்கள் இந்த சதிச் செயலுக்கு ஆளாகி விடாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க