September 4, 2021
தண்டோரா குழு
நெல்லையை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 28). கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கோவை வந்த இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கடந்த ஆறு மாதங்களாக ஓட்டல் உரிமையாளர் சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து உரிமையாளரிடம் குமாரசாமி பலமுறை கேட்டும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் செலவுக்கு பணமில்லாமல் குமாரசாமி மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் டீசல் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த இவர் திடீரென கையில் வைத்திருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தி குமாரசாமியை மீட்டனர். பின்னர் விசாரணைக்காக அவரை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.