June 5, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரொனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரொனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்
சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.