• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

December 26, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றது முதல் தமிழக முழுவதும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அதன் தொடர்ச்சியாக கோவை வந்த உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்ட பணிகளுக்கு பூஜை போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்,அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம்,வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,மாவட்ட ஆட்சியர் சமீரண், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், வருவாய்த்துறை அதிகாரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, திட்டங்கள் குறித்து செயலாக்கம் குறித்து தெரிவித்தனர்.

முன்னதாக கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க