February 18, 2020
தண்டோரா குழு
வேலையின்மை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – போலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுவினால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வேலையின்மைக்கு எதிராக பேரணியில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தினால் போலிசாருக்கும் மாண்வர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் டி.என்.பி.எஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை சி.பி.ஐ விசாரணை வேண்டியும், வேலையின்மைக்கு எதிராகவும், புதிய வேலை வாய்புகளை உருவாக்கவும், அரசு காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டியும், படிப்புக்கு ஏற்ற வேலைவாய்பினை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்னிறுத்தி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முற்றுகையில் ஈடுப்பட்ட 41 பேர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு போலிசார் அழைத்து சென்றனர்.