• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு கருவிகள் இல்லை பக்கெட் தண்ணீர் உண்டு – பொதுமக்கள் புகார்

May 21, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், சிலர் தீக்குளிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு கருவிகளை வைக்காமல் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் வைத்தாக குற்றம்சாட்டிள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது சில நேரங்களில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்திலேயே பொதுமக்கள் சிலர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் தீ தடுப்பு கருவிகளை வைக்காமல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வாளி மற்றும் குடத்தில் தண்ணீரை வைத்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான வகையில் எடுப்பதில்லை என புகார் எழுந்து உள்ளது.

இந்தகுறைந்த அளவிலான தண்ணீரை வைத்து எந்த வித தீயையும் விரைவில் கட்டுப்படுத்த முடியாது என்பதால் முன்னெச்சரிக்கையை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க