February 1, 2018
தண்டோரா குழு
கோவை அவினாசி சாலையில் ஓடும் காரில் தீ பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீ கேஸ், என்பவர் தனது, டொயோட்டோ எம்.ஆர்.2 ஸ்போர்ட்ஸ் காரில் அவினாசி சாலையில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அண்ணா சிலை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காரின் பின் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக கார் நிறுதப்பட்டு ,காரில் வந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஸ்டவசமாக காரில் பயணம் செய்த இருவரும் உயிர் தப்பினர். காரில் பிடித்த தீ மல மலவென பரவியதால் காரின் பின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனையப்பு துறையினர் தீயை அணைத்தனர். காரில் பெட்ரோல் கசிவினால் தீ விபத்து ஏற்பாட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அவினாசி சாலையில் , பெட்ரோல் பங்க் அருகே காரில் தீ விபத்த ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.